ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»English news»இன்று நள்ளிரவு முதல் தடுப்பூசி பெற்று இலங்கை வருவோருக்கு வீடு செல்ல அனுமதி
    English news

    இன்று நள்ளிரவு முதல் தடுப்பூசி பெற்று இலங்கை வருவோருக்கு வீடு செல்ல அனுமதி

    AdminBy AdminSeptember 28, 2021Updated:September 29, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    – விமானத்தில் ஏற 72 மணித்தியாலத்திற்கு முன் PCR முடிவு அவசியம்
    – தடுப்பூசி ஏற்றி 14 நாட்கள் முழுமைப்படுத்தியிருப்பது கட்டாயம்

    இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் மேற்கொண்ட கொவிட்-19 தொற்று தொடர்பான PCR முடிவுகளுக்கமைய, மீண்டும் இலங்கையில் PCR சோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இன்று நள்ளிரவு (29) முதல் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

    இதற்காக, கொவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் முழுமையாக பூர்த்தி செய்து 14 நாட்கள் பூர்த்தி செய்திருப்பது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இன்று (28) பிற்பகல் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளின் பேரில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன், இதில் சுகாதார மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

     

    இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர்க் குமிழி பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதுடன், அங்கு வைத்து அவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

    எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு 12ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் PCR சோதனையில் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

    வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    தற்போது, ​​நாட்டிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்களது சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் தொற்றாளர்களாக இல்லையெனின் மாத்திரம் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    அத்துடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, இரண்டு வாரங்கள் பூரணப்படுத்தப்பட்ட பயணிகள் இலங்கை திரும்பும்போது, அவர்களுக்கு மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கமைய, அவர்கள் சமூகத்தில் இணைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

     

    Post Views: 320

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புகையிரத கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

    June 28, 2022

    யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு

    June 28, 2022

    எரிபொருள் பெற்றவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2021
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022

    இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு

    June 28, 2022

    இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

    June 28, 2022

    பலாலி விமான நிலைய செயற்பாடுகள் ஜூலை 1 முதல் ஆரம்பம்

    June 28, 2022

    புகையிரத கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

    June 28, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு
    • இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
    • இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
    • பலாலி விமான நிலைய செயற்பாடுகள் ஜூலை 1 முதல் ஆரம்பம்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version