ilakkiyainfo

ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது.

பிரவுன் பல்கலைக்கழகத்தின் ‘போர் செலவு’ ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, தாலிபன்களின் அதிகரித்து வரும் வலு, நாட்டின் ஆக்கிரமிப்பு மற்றும் குழப்பமான சூழல் ஆகியவை அமெரிக்காவின் தோல்வி என்று பல நிபுணர்கள் விவரிக்கின்றனர்.

சிலருக்கு இது ஒரு தோல்வியடைந்த போராக இருந்தாலும், பலருக்கு இது ஒரு லாபகரமான விஷயமாக இருந்தது.

2001 க்கும் 2021 க்கும் இடையில், இந்த போரில் செலவழித்த 2.3 ட்ரில்லியன் டாலரில், சுமார் 1.05 ட்ரில்லியன் டாலர் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளுக்கு செலவிடப்பட்டது.

 

இந்த தொகையின் பெரும் பகுதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தனியார் நிறுவனங்களின் சேவைகளுக்காக செலவிடப்பட்டது.

விமானங்களில் எரிபொருள் நிரப்புதல், லாரி ஓட்டுதல், சமையல், சுத்தம் செய்தல், ஹெலிகாப்டர்கள் இயக்குவது போன்ற பணிகளை ஒப்பந்தக்காரர்கள் செய்தனர்.

விமானங்களில் எரிபொருள் நிரப்புதல், லாரி ஓட்டுதல், சமையல், சுத்தம் செய்தல், ஹெலிகாப்டர்கள் இயக்குவது போன்ற பணிகளை ஒப்பந்தக்காரர்கள் செய்தனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்னன்ஸின் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ், “இந்தப் போரில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவில்லை.

தன்னார்வ ராணுவ வீரர்கள், ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்பட்டனர். அமெரிக்க வீரர்களை விட ஒப்பந்தத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது,” என்று குறிப்பிடுகிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டிய துருப்புக்களின் எண்ணிக்கை அரசியல்ரீதியாக மட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் ஒப்பந்தக்காரர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது என்றும் லிண்டா பில்ம்ஸ் பிபிசியிடம் கூறினார்.

“விமானங்களில் எரிபொருள் நிரப்புதல், லாரி ஓட்டுதல், சமையல், சுத்தம் செய்தல், ஹெலிகாப்டர்கள் இயக்குவது மற்றும் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு வருவது மற்றும் எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்ய ஒப்பந்தக்காரர்கள் இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

அதிகம் பயனடைந்த 5 நிறுவனங்கள்
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய்க்கு டைன்கார்ப் நிறுவனம் மெய்க்காப்பாளர்களை வழங்கியது

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய்க்கு டைன்கார்ப் நிறுவனம் மெய்க்காப்பாளர்களை வழங்கியது

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் எல்லா வகையான சேவைகளுக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையியிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்றன. இவற்றில் சில நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்தன.

’20 வருடப் போர்’ திட்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ஹெய்டி பெல்டியரும் ‘போர் செலவு’ ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தார்.

எந்த நிறுவனங்கள் அதிகம் பயனடைந்தன என்பதைக் காட்ட எந்த அதிகாரப்பூர்வ தரவும் இல்லை என்று பிபிசியிடம் குறிப்பிட்ட அவர், திட்டத்தின் மதிப்பீடுகளை பிபிசி முண்டோவிடம் பகிர்ந்து கொண்டார். இந்த மதிப்பீடுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த மதிப்பீடுகள் அமெரிக்க அரசின் வலைத்தளமான usaspending.gov இல் கிடைக்கும் தரவுகளின் மறுஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தரவு அமெரிக்க நிதிச் செலவுகள் குறித்த அதிகாரபூர்வ தகவலை அளிக்கிறது. இது 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தயாரிக்கப்பட்டது.

“இந்த புள்ளிவிவரங்கள் முக்கியமாக 2008 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

இருப்பினும், சில திட்டங்கள் 2008ஆம் ஆண்டுக்கு முன்பே உள்ளன. எனவே 2001 ஆம் ஆண்டு முதல் பார்த்தால், உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கலாம்,” என ஹெய்டி பெல்டியர் கூறுகிறார்,

இந்த மதிப்பீடுகளின்படி, ஆப்கானிஸ்தானில் ஒப்பந்தங்கள் அதிகம் கிடைக்கப்பெற்ற முதல் மூன்று அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்கள், டைன்கார்ப் (Dinecorp), ஃப்ளூயர் (Fluer), கெல்லாஜ் ப்ரவுன் & ரூட் (Kellogg Brown & Root – KBR).

‘ராணுவத்திற்கான தளவாடங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்வதில், பொது மக்களை ஈடுபடுத்தும் திட்டத்தின் ‘ (LogCAP) ஒரு பகுதியாக இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

“லாக்கேப் என்பது விரிவான பல ஆண்டு கால ஒப்பந்தங்கள். அவை தளவாடங்கள், மேலாண்மை, போக்குவரத்து, உபகரணங்கள் விமான பராமரிப்பு மற்றும் உதவி ஆகியவற்றில் பல்வேறு சேவைகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன” என்று ஹெய்டி பெல்டியர் விளக்குகிறார்.

டைன்கார்ப்

ஆப்கானிஸ்தானின் காவல்துறை மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புப் படைகளுக்கு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவது Dinecorp இன் பல பணிகளில் ஒன்றாகும். ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்தபோது அவருக்கு பாதுகாவலர்களையும் நிறுவனம் வழங்கியது.

ஹெய்டி பெல்டியரின் மதிப்பீட்டின்படி, லாக்கேப்பில் இருந்து 7.5 பில்லியன் டாலர் உட்பட, 14.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை டைன்கார்ப் பெற்றது. டைன்கார்ப் நிறுவனம் சமீபத்தில் அமெண்டம் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

“2002 முதல், டைன்கார்ப் இன்டர்நேஷனல் தனது அரசு வாடிக்கையாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது” என டைன்கார்ப் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் அதன் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

தனியார் நிறுவனமாக இருப்பதால், அது தனது ஒப்பந்தங்கள் மற்றும் பிற நிதி விவரங்களை பொதுவில் வெளியிடுவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஃப்ளூயர், டெக்சாஸை தளமாகக் கொண்ட நிறுவனம். இது தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத் தளங்கள் நிர்மாணத்தை மேற்பார்வையிட்டது.

நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவலின் படி, இது ஆப்கானிஸ்தானில் 76 முன்னரங்க இயக்க தளங்களை (சிறிய ராணுவ தளங்கள்) செயல்படுத்தியது.

ஒரு லட்சம் வீரர்களுக்கு உதவியது மற்றும் ஒரு நாளில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கியது.

ஃப்ளுயர் கார்ப்பரேஷன் 13.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றது. அதில் 12.6 பில்லியன் டாலர்கள் லாக்கேப் மூலமானது என்று ஹெய்டி பெல்டியர் தெரிவிக்கிறார்.

பிபிசி முண்டோ ஃப்ளூயர் நிறுவனத்தை ஆப்கானிஸ்தான் போரில் அதன் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை அளிக்குமாறு கோரியது. ஆனால் இந்த செய்தி வெளியிடப்படும் வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கேபிஆர்
ஃப்ளுயர், டெக்சாஸில் இருந்து செயல்படும் நிறுவனமாகும். தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ தளங்கள் நிர்மாணத்தை மேற்பார்வையிட்டது.

 

ஃப்ளுயர், டெக்சாஸில் இருந்து செயல்படும் நிறுவனமாகும். தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ தளங்கள் நிர்மாணத்தை மேற்பார்வையிட்டது.

கெல்லாக் பிரவுன் ரூட் (KBR) அமெரிக்கப் படைகளுக்கு உதவ பொறியியல் மற்றும் பிற வசதிகளை வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டது. வீரர்களுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் பிற அடிப்படை சேவைகளை வழங்கி வந்தது.

இந்த நிறுவனம் நேட்டோ விமானத் தாக்குதல்களுக்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல விமான நிலையங்களுக்கு தரையிலிருந்து ஆதரவையும் வழங்கியது. ஓடுபாதைகள் மற்றும் விமானங்களின் பராமரிப்பு, வான் தகவல் தொடர்பு ஆகியவை இதன் பணிகளில் அடங்கும்.
கேபிஆர்

KBR அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றது என்று ஹெய்டி பெல்டியரின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

“கேபிஆர் ஆப்கானிஸ்தானில் 2002 முதல் 2010 வரை லாக்கேப் கீழ் போட்டியிட்டுப் பெற்ற ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க ராணுவத்தை ஆதரித்தது.

நாங்கள் 2001 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தை பெற்றோம்,” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

“இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம், 82 அமெரிக்க ராணுவ தளங்களுக்கு உணவு, சலவை, மின்சாரம், சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியது.

2009 ஜூலையில் ராணுவம் இந்த ஒப்பந்தத்தை டைன்கார்ப் மற்றும் ஃப்ளூயர் நிறுவனங்களுக்கு வழங்கியது. அவை இணைந்து பணியாற்றின. கேபிஆர் 2010 ஆம் ஆண்டில் தன் சேவைகளை நிறுத்தியது,” என்று அவர் மேலும் கூறினார்.

ரேதியன்

அமெரிக்காவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான ரேதியன், அதிக வருவாய் ஈட்டிய நான்காவது நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆப்கானிஸ்தான் சேவைகளுக்காக 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றது.

அதன் சமீபத்திய பணி, ஆப்கானிஸ்தான் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதாகும். இதற்காக 2020 ஆம் ஆண்டில் 145 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைத்தது.

ஏஜிஸ் எல்எல்சி என்பது வெர்ஜீனியாவை தளமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனம் ஆகும். இது சேவைகள் வழங்கல் மூலம் ஆப்கானிஸ்தானில் அதிக வருவாய் ஈட்டிய ஐந்தாவது நிறுவனமாகும். இது 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றது.

இந்த நிறுவனம் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு அளித்தது.

ஆப்கானிஸ்தானில் அதன் செயல்பாடுகள் குறித்து அறிய பிபிசி முண்டோ, ஏபிஸை தொடர்புகொண்டது. ஆனால் இந்தக்கட்டுரை வெளியாகும் வரை அதன் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

பாதுகாப்பு நிறுவனங்களின் லாபம்?
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்கிறது

அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்களான போயிங், ரேதியன், லாக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் டைனமிக்ஸ் மற்றும் நார்த்ரோப் க்ரூம்மெய்ன் ஆகியவை ஆப்கான் போரிலிருந்து பெரிதும் பயனடைந்தன என்று பிபிசி முண்டோவிடம் நிபுணர்கள் தெரிவித்தனர்.

“அந்த நிறுவனங்கள் போரிலிருந்து நிறைய பணம் சம்பாதித்தன.”என்று லிண்டா பில்ம்ஸ் கூறுகிறார்.

இருப்பினும், ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் நடவடிக்கைகளுக்கும், நிறுவனங்களின் ஒப்பந்தங்களுக்கும் இடையே நேரடியாக தொடர்பு இல்லாததால் அவை எவ்வளவு தொகையை பெற்றன என்பதைக் கண்டறிவது கடினம்.

“இந்த நிறுவனங்களுக்கு, ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்களை தயாரிக்க அமெரிக்காவில் ஒப்பந்தங்கள் கிடைத்தன. எனவே இந்த செலவுகள், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட செலவுகளில் சேர்க்கப்படவில்லை,” என்று ஹெய்டி பெல்டியர் விளக்குகிறார்.

9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ராணுவச் செலவிலிருந்து அதிக நன்மைகளை இந்த நிறுவனங்கள்தான் பெற்றுள்ளன என்று ‘காஸ்ட் ஆஃப் வார்’ திட்டம், இந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“2001 – 2020 நிதியாண்டுகளுக்கு இடையில், இந்த ஐந்து நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையிலிருந்து 2.1 டிரில்லியன் டாலர் (2021ல் கணக்கிடப்பட்டது) மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றன,” என்று அறிக்கை கூறுகிறது.

ஆப்கானிஸ்தானில் நடந்த போர் அவர்களின் வணிகத்திற்கும், ஒப்பந்தங்களுக்கும் எவ்வாறு உதவியது என்று பிபிசி முண்டோ இந்த ஐந்து நிறுவனங்களிடமும் கேட்டது.

ஜெனரல் டைனமிக்ஸ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த கட்டுரை வெளியிடப்படும் வரை மற்ற நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.

போயிங், F-15 மற்றும் F-18 போர் விமானங்களை தயாரிக்கிறது.

 

ரேதியன் நிறுவனத்தை உதாரணமாக சுட்டிக்காட்டும் ஹெய்டி பெல்டியர், 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்த நிறுவனம் சம்பாதித்தது என்றாலும் இந்தப் புள்ளிவிவரம் ஆப்கானிஸ்தானில் நேரடியாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கானது மட்டுமே என்று கூறுகிறார்.

“ரேதியன், ஆயுதங்கள் அல்லது தகவல்தொடர்பு அமைப்புகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டால், அந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானுடன் இணைந்ததாக கருதப்படாது,” என்று அவர் கூறுகிறார்.

போயிங், F-15 மற்றும் F-18 போர் விமானங்களை தயாரிக்கிறது. ஆனால் போயிங், முக்கிய ஒப்பந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அதேபோல், பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டினும் இந்தப் பட்டியலில் இல்லை.

“ஜெனரல் டைனமிக்ஸ் பெரும்பாலும் இலகுரக ராணுவ வாகனங்களை தயாரிக்கிறது. ஆப்கானிஸ்தானில் நிறைய சைபர் பாதுகாப்பு பணிகளையும் அது செய்தது,” என்று லிண்டா பில்ம்ஸ் கூறுகிறார்.

பிபிசி முண்டோவின் கேள்விகளுக்குப் பதிலளித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தானில் உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த ஐந்து பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகை ஈட்டினார்கள் என்பதைக் கண்டறிவது கடினம் என்பதை உறுதிப்படுத்தினார்.

“இந்த நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுகிறது.

ஆனால் அவை ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமானதல்ல. உலகெங்கிலும் உள்ள செயல்பாடுகளுக்காக நாங்கள் அவற்றை வாங்குகிறோம். சில ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.

விலைகளில் ஏகபோகம்

ஜெனரல் டைனமிக்ஸ் பெரும்பாலும் இலகுரக ராணுவ வாகனங்களை தயாரிக்கிறது.

ஆப்கானிஸ்தான் போரில் சேவைகளின் விலைகள் தொடர்பாக நிறுவனங்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருந்தன என்று லிண்டா பில்ம்ஸ் கூறுகிறார்.

“பல ஒப்பந்தங்கள் போட்டியின்றி வழங்கப்பட்டன அல்லது மிகக் குறைந்த போட்டி இருந்தது. அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மிகக் குறைவு. எனவே சில நிறுவனங்களின் ஏகபோகம் இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

பல சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிடுகின்றன. சேவை வழங்கும் இடத்தின் மோசமான பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் அங்கு செல்வதில் உள்ள சிரமங்களை மேற்கோள் காட்டி, அவை இதைச்செய்கின்றன என்று லிண்டா தெரிவிக்கிறார்.

ஆளில்லா ஐ.நா அரங்கில் உரையாற்றினாரா நரேந்திர மோதி? உண்மை என்ன?
ஆப்கன் பெண்களுக்கு தாலிபன்கள் கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது – இம்ரான் கான்

ஆப்கானிஸ்தான் போரில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட விதம் குறித்து, பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “முடிந்தவரை போட்டியின் அடிப்படையில் ஒப்பந்தங்களை வழங்குவதே பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கையாகும். இருப்பினும், பெரும்பாலான ஆயுத அமைப்புகளுக்கு, அதன் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே டெண்டர்கள் விடப்பட்டன, “என்றார்.

அதில் ஊழல் இருப்பதாக லிண்டா கூறுகிறார். “ஒரு சுவரை வண்ணம் பூச 20 மடங்கு அதிகம் கட்டணம் பெறுவது ஒரு விஷயம். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு, சுவருக்கு வண்ணமும் பூசாதது ஊழல். அதாவது வண்ணம் தீட்ட எதுவும் இல்லை, ஆனாலும் பணம் பெறப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

அதே நேரத்தில், துணை ஒப்பந்தக்காரர்களுக்கும் ஆப்கானிஸ்தானில் வேலை வழங்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். இதன் பொருள் அரசிடம் இருந்து வேலை வாங்கிய முக்கிய ஒப்பந்ததாரர் வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுத்து வேலையை முடித்தார்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினர்

 

துணை ஒப்பந்தக்காரர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என்கிற கணக்கு இல்லை என்று லிண்டா பில்ம்ஸ் தெரிவிக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், ” ஒரே ஒரு சேவை வழங்குபவர் மட்டுமே இருக்கும் நிலையில்கூட , பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நியாயமான விலையின் உத்தரவாதத்தை அளிக்கும் ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பை நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வழங்குகின்றன,” என்றார்.

மோசடி, துஷ்பிரயோகம் அல்லது ஊழல் பற்றிய எந்த ஆதாரம் இருந்தாலும் அது பாதுகாப்பு ஆய்வாளர் ஜெனரலுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று ஜெசிகா மேக்ஸ்வெல் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு முயற்சிகளில் துஷ்பிரயோகம் அல்லது மோசடி காரணமாக 2008 மற்றும் 2017 க்கு இடையில் அமெரிக்கா சுமார் 15.5 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்ததாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்ததாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“போர் காரணமாக ஒரு வகையான நிறுவனத்திற்கு மட்டுமே பயன் ஏற்பட்டது என்று சொல்லமுடியாது.

பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள், தளவாட நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் சப்ளையர்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இதன்மூலம் பயன்பெற்றன,” என்று லிண்டா பில்ம்ஸ் குறிப்பிட்டார்.

Exit mobile version