ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, January 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    அந்தரங்கம்

    காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்’; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்? – காமத்துக்கு மரியாதை -1

    AdminBy AdminOctober 4, 2021No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தாம்பத்திய உறவின்போது புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும். ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்றபடி கணவனின் புணர்ச்சி உறுப்பின் நீளம் இருக்க வேண்டும்.

    பேருந்தில் பின்னால் உரசுபவனை `மிருகம் மாதிரி நடந்துக்கிறான் பாரு’ என்று பெண்கள் திட்டுவதை நிறைய பேர் கேட்டிருப்போம் அல்லது நாமேகூட அப்படித் திட்டியிருப்போம்.

    தன் துணையிடம் அல்லது தன்னை விரும்புகிற பெண் தவிர்த்து, மற்ற பெண்களிடம் தன்னுடைய காமத்தை உரசுவதில் ஆரம்பித்து வன்புணர்வு வரைக்கும் ஏதோ ஒருவகையில் அடைய விரும்புகிற ஆண்களை, பெண்கள் `மிருகம்’ என்றே நினைக்கிறார்கள்.

    அதை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், காமசூத்ரம் என்ன சொல்கிறது தெரியுமா?

    மனிதர்களின் காமத்துக்கும் விலங்குகளின் காமத்துக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசமொன்று இருக்கிறது.

    அதன் பெயர் மனம். காமத்தில் கிடைக்கிற சுகத்தை விலங்குகளால் அறிய முடியாது. அதற்கு மனம் கிடையாது. அதனால்தான், இயற்கையின் நியதிப்படி அவை இனப்பெருக்க காலத்தில் மட்டும் இணை சேர்கின்றன.

    மனிதர்களின் மனதுக்கு காமத்தின் மூலம் உணரப்படுகிற சுகம் தெரியும் என்பதால்தான், சிலர் எந்நேரமும், எக்காலமும் அதே நினைப்புடன் இருப்பார்கள்.

    காமத்தில் `தன் சுகம் மட்டுமே பெரிது’ என ஆண் நினைக்கும்போதுதான், அது வன்புணர்வு வரைக்கும் சென்று விடுகிறது. விலங்களுக்கு இதெல்லாம் தெரியாது என்பதால், இப்படிப்பட்ட மனிதர்களை இனிமேல் மிருகங்களுடன் ஒப்புமை செய்யாமல் இருப்பது நலம்

    காமத்தையும் மிருகத்தையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் திருமணப் பொருத்தங்களில் ஒன்றான `யோனிப் பொருத்தம்’ பற்றியும் கட்டாயம் பேச வேண்டியிருக்கிறது.

    இந்தப் பொருத்தத்தில், ஆண் பெண் பாலுறுப்புகளை விலங்குகளின் பாலுறுப்புகளோடு பொருத்திப் பார்ப்பார்கள்.

    திருமண பந்தத்தில் நுழையவிருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் `சமரத’மாக, அதாவது பொருத்தமாக இருக்க வேண்டும் என்கிறது காமசூத்ரம். அது என்ன சமரதம்?

    வாத்ஸாயனரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், தாம்பத்திய உறவின்போது புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும்.

    அதற்குக் கணவன், மனைவி புணர்ச்சி உறுப்புகளின் அகல, நீள மற்றும் ஆழ அளவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.

    ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்றபடி கணவனின் புணர்ச்சி உறுப்பின் நீளம் இருக்க வேண்டும்.

    அப்படியில்லாதபோது இருவருக்குமே தாம்பத்திய உறவில் திருப்தி கிடைக்காது. இந்த விஷயத்தைத்தான் `யோனிப்பொருத்தம்’ மூலம் கண்டறிவதாக காமசூத்ரா சொல்கிறது.

    இதுபற்றி மனநல மருத்துவர் ஷாலினி பேசும்போது, “கல்யாணம் செஞ்சுக்கப்போற ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸுவலி கெமிஸ்ட்ரி நல்லா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிறதுதான் யோனிப் பொருத்தம்.

    ஆணோ, பெண்ணோ சிலருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகமிருக்கும்; சிலருக்கு குறைவா இருக்கும்.

    இதைத் தெரிஞ்சுக்கிட்டு, யாருடன் யாரை சேர்க்கணும்கிறதை கண்டுபிடிக்கிற ஒரு வழியாத்தான் நான் யோனிப் பொருத்தத்தைப் பார்க்கிறேன்.

    இது திருமணத்துக்கு மிக மிக தேவைங்கிறதுதான் என்னோட கருத்தும். ஆனா, இதை சம்பந்தப்பட்டவங்களுடைய இயல்பை வெச்சுதான் கண்டுபிடிக்க முடியும்.

    உதாரணத்துக்கு சொல்லணும்னா, பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்கள்லகூட நிச்சயத்துக்குப்பிறகு கிடைக்கிற கேப்ல சிலர் `செக்ஸ் டாக்’ வரைக்கும் பேசி, நல்லா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆன பிறகு கல்யாணம் செஞ்சுப்பாங்க. சிலர்,

    இந்தக் காலத்திலும் `நீ சாப்பிட்டியா; நீங்க சாப்பிட்டீங்களா’ங்கிற அளவுலேயே பேசிட்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க.

    `உனக்கு என்ன கலர் பிடிக்கும்’னு கேட்கிறதையே பெரிய பகிர்தலா நினைச்சுக்கிற சிலரும் இந்தத் தலைமுறையில இருக்காங்க. நம்புறதுக்கு கஷ்டமா இருந்தாலும் நான் சந்திச்சுட்டு வர்ற உண்மை இது. இவங்களுக்கு செக்ஸ் தொடர்பா என்ன விழிப்புணர்வு

    இருந்துவிட முடியும்? சிலர் அப்படியே எதிர்ப்பதமா `அதான் நிச்சயமாயிடுச்சுல்ல’ என்று டாப்லெஸ் போட்டோ கேட்குற அளவுக்கு, அனுப்புற அளவுக்கும் இருக்காங்க. ரெண்டுமே அதிகப்படிதான்.

    முதல் இரண்டு வகையில், நாசுக்கு நாகரிகம் பார்த்து செக்ஸ் டாக் இல்லாம இருந்துட்டு, திருமணத்துக்குப்பிறகு செக்ஸ் லைஃப்ல சந்தோஷமா இருக்காங்கன்னா நல்லது.

    அப்படியில்லாம, குத்துமதிப்பா செக்ஸ் பண்ணிட்டோ அல்லது எனக்கு மட்டும் உச்சக்கட்டம் கிடைச்சா போதும்னோ ஆண் இருந்தா பெண் நிலைமை கஷ்டம்தான்.

    மூன்றாவது வகையில் அடக்கி வெச்சதையெல்லாம் தனக்குன்னு ஒரு பொண்ணு நிச்சயமானதும் வெளிக்காட்டுறான்னா,

    அல்லது அந்தப் பெண்ணை செக்ஸ் டாய் மாதிரி பயன்படுத்துவானா அப்படிங்கிறது திருமணத்துக்குப் பின்னாடிதான் தெரிய வரும்.

    இந்த விஷயங்களை ஓரளவுக்காவது முன்கூட்டியே தெரிஞ்சுக்கணும்னா பரஸ்பரம் நிறைய பேசணும்.

    நிச்சயம் செஞ்ச திருமணத்தை நிறுத்துற பேச்சைப்பத்தி நான் குறிப்பிடலை. சேர்ந்து வாழறதுக்கு தேவையான பேச்சுகளைப் பேசணும்.

    பரஸ்பரம் உருவம் பிடிச்சிருக்கணும்; குணம் பிடிச்சிருக்கணும்; இவனோட/இவளோட ஒரே அறையை பகிர்ந்துக்க எனக்குப் பிடிச்சிருக்குன்னு மனசு சொல்லணும்.

    அதுக்காக மனசு கொஞ்சம் ஏங்கவும் செய்யணும். முக்கியமா, பரஸ்பரம் உடல்களைப் பகிர்ந்துக்கிறதை பத்தி யோசிக்கிறப்போ இவன்கூடவா/இவகூடவான்னு அருவருப்பு வரவே கூடாது. அப்படி வந்தா, ரெண்டு பேருக்கு நடுவுல யோனிப்பொருத்தம் இல்ல. அதாவது, கெமிஸ்ட்ரி இல்லைன்னு அர்த்தம்” என்கிறார்.

    வாசகர் கேள்வி: எனக்கு வயது 25. பெண்ணுறுப்பில் கொப்புளம் வந்து சரியாகிடுச்சு. ஆனா, அந்த இடத்தில் சின்ன குழி மாதிரி இருக்கு. இதனால் ஏதாவது பிரச்னை வருமா ?

    டாக்டர் பதில்: “அந்த இடத்திலிருப்பது மென்மையான திசுக்கள் என்பதால், சரியாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளத்தான் செய்யும். மற்றபடி, உங்கள் கன்னத்தில் ஒரு கொப்புளம் வந்து, அது ஆறியதும் அந்த இடத்தில் குழி ஏற்பட்டால் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ அப்படித்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதை இந்த அளவுக்கு உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

    இது தேவையே இல்லை. இதனால் உங்களுக்கு ஒரு பிரச்னையும் வரப்போவதில்லை. தைரியமாக இருங்கள்.”

    இப்படிப்பட்ட காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்;

    கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம்.

    உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

     

    Post Views: 1,450

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)

    March 10, 2022

    உடலுறவின் உச்சக்கட்டத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? – பெட்ரூம் – கற்க கசடற – 4

    October 5, 2021

    உடலுறவில் பெண்கள் இதையெல்லாம் விரும்புகிறார்கள் எனத் தெரியுமா? – பெட்ரூம் – கற்க கசடற – 3

    September 19, 2021

    Leave A Reply Cancel Reply

    October 2021
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    January 29, 2023

    காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்

    January 29, 2023

    மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!

    January 29, 2023

    ’’அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’’: ஆண்மை இழந்த கணவன் அறிவுரை

    January 29, 2023

    புட்டீன் மீண்டும் விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல்

    January 29, 2023
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    • 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி…! சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • (no title)
    • காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்
    • மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!
    • ’’அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’’: ஆண்மை இழந்த கணவன் அறிவுரை
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    • 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி…! சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version