Site icon ilakkiyainfo

அழுத பெண்ணுக்கு கட்டணம் அறவிட்ட வைத்தியசாலை

பெண்ணொருவர் அழுதமைக்காக வைத்தியசாலையில் கட்டணம் அறவிடப்பட்ட விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மிட்ச் எனும் பெண் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

 

அங்கு அவருக்கு மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சையின் போது பயத்தில் குறித்த பெண் அழுதுள்ளார். சிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட கட்டணப்பட்டியலில் சிகிச்சைக்கான கட்டணமாக 223 டொலர்களும், சிகிச்சையின் போது அழுதமைக்காக பிரீஃப் எமோஷன் என்ற பெயரில் 11 டொலர்களும் கட்டணமாகக் கோரப்பட்டிருந்தது.

இவ்விடயம் குறித்து அதிர்ச்சியடைந்த அப் பெண்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு மருத்துவமனை அளித்த கட்டண பற்றுச் சீட்டைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த அழுகைக் கட்டண விவகாரம் பேசு பொருளாக மாறி வருகின்றது.

Exit mobile version