Site icon ilakkiyainfo

கால்வாயில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (09) இரவு, வேலை முடித்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த நபர், காணாமல் போயிருந்தார். இந்நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version