அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஜோன் இசென்மன்
அவரது மகள், அரோன் சோரென்சன்(Aaron Sorenson) , என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாகவும்,
ஆனால் அரோன் பணத்திற்காக கடந்த ஆண்டு அவரது மகளைப் பாலியல் தொழில் புரியும் கும்பலிடம்1,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், ஆத்திரமடைந்த ஜோன் தனது மகளை அக் கும்பலிடமிருந்து மீட்டுள்ளதோடு, அரோனை காட்டுப் பகுதிக்குள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாகவும் பின்னர் அரோனின் உடலை கார் டிக்கிக்குள் வைத்து ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நீண்ட காலமாக சந்தேகத்துக்கிடமாக கார் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவே குறித்த காரில் எலும்புக் கூடு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
மேலும் விசாரணையில், குறித்த எலும்புக்கூடானது அரோனுடையது என்பது தெரியவந்துள்ள நிலையில் ஜோன் தானாகவே பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.