Site icon ilakkiyainfo

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை: இராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இன்று (19) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

மீனவர்கள், மீன் வளத்துறையினர், கரையோர பொலிஸார் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையினை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தமிழக அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version