கோவிட்-19 இன் ஐந்தாவது அலையால் சுவிட்சர்லாந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய பொது சுகாதார அலுவலகம் (OFSP) தெரிவித்துள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 103 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14 நாட்களில், மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 67,732 அதிகரித்துள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 12,549,728 சோதனைகளில் 970,750 பேருக்கு கோவிட்-19 தொற்று ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 11,053 ஆகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,067 ஆகவும் உள்ளது.
நாட்டில் 35,044 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுடன தொடர்புகளில் இருந்த 24,335 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.