ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»பிரதமர் மஹிந்தவினாலேயே ரணில் தப்பினார். – மஹிந்தானந்த வெளியிட்ட புதிய தகவல்
    இலங்கை செய்திகள்

    பிரதமர் மஹிந்தவினாலேயே ரணில் தப்பினார். – மஹிந்தானந்த வெளியிட்ட புதிய தகவல்

    AdminBy AdminNovember 24, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    p>

    என்னை கொலை செய்ய முயற்சித்த விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தான்  ரணில் விக்கிரமசிங்க தப்பினார்.

    ரணில் விக்கிரமசிங்க மீது என்னால் முறைப்பாடு செய்திருக்க முடியும். எனினும் அந்த விடயத்தை விட்டு விடுங்கள் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கேட்டுகொண்டதாலேயே ரணில் மீது முறைப்பாடு செய்யவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் தெரிவித்தார்.

     

    பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (23)  இடம்பெற்ற  ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான செலவின தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில்,

    கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் பழிவாங்கப்பட்டோம். முதற் 10  திருடர்கள் என அப்போதைய ஆளுந்தரப்பினர் தொடர்பில் நான் முறைப்பாடு செய்து இரண்டு வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் ஒருவரிடமிருந்து கூட வாக்குமூலம் பெறப்படவில்லை

    இதேவேளை, எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ள உறுப்பினர் ஒருவர் தொடர்பில் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து வாக்குமூலம் வழங்கினால் பிணை கூட வழங்காது அவரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அந்த முன்வரிசை உறுப்பினர் மட்டுமல்ல அவரது முழுக்  குடும்பமும் கைது செய்யப்படுவார்கள்

    இதேபோல முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை கொலை செய்ய முயன்றார் என முறைப்பாடு செய்தால் ரணிலும் கைது செய்யப்படுவார்.

    இந்த விடயத்தை விட்டுவிடுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுகொண்டதாலேயே நான் இந்த விடயத்தை விட்டுவிட்டேன் .அதனால் ரணில் தப்பித்தார்.

    அப்போது பொலிஸு க்கு பொறுப்பான அமைச்சராக இருந்த சாகல ரத்னாயக்க பாதாள உலகத்திற்கு உதவினார்.ஆனால் பாதாள உலகத்தை ஒழித்தது கோத்தபாய  ராஜபக்ஷ தான்.

    இன்று பாதாள உலகத்தினரை காண முடிகிறதா? நீதிமன்றங்களை எவ்வாறு  நடத்தினீர்கள் என்று எமக்குத் தெரியும் .

    அலரி மாளிகையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. பிணைமுறி மோசடியை வெளியில் கொண்டுவந்ததாலே எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்கள்.

    எமது ஆட்சியில் நாம் யாரையும் பழிவாங்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுக்கவோ குழப்பவோ இல்லை. பழி வாங்குவதை நிறுத்தமாறு ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு கூறியுள்ளனர்.ஜனாதிபதியை விரும்பியவாறு விமர்சிக்க முடிகிறது. நாட்டுக்காக சிறந்த கொள்கைகளை கொண்டுவந்தவரை விமர்சிக்கின்றனர்.

    ஜனாதிபதி கொத்தாதபய  ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகி முதலாம் வருடத்தில் 1.3 பில்லியன் ரூபா தான் செலவிட்டார். மைத்திரிபால சிரிசேன  3.07 பில்லியன் ரூபா செலவிட்டார்.

    கோத்தபாய  ராஜபக்‌ஷ  1.7 பில்லியன் ரூபாவை  மக்களுக்காக எஞ்சவைத்தார். 200 வாகனங்களை முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்தினார்.ஆனால் எமது ஜனாதிபதி 10 வாகனங்களை மாத்திரம் தான் பாவிக்கிறார் தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் செலவை அவரே செய்கிறார்.

    15-20 வாகனங்களை கடந்த அரசில் அமைச்சர்கள் பயன்படுத்தினார்கள்.ஆனால் எமது அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 வருடத்தில் புதிய வாகனம்  தருவிக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் உங்கள் ஆட்சியில்  புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.

    ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதி கோவிட் பிரச்சினையிலே சென்றது. நாட்டை கட்டியெழுப்புவதை ஒருபக்கம் வைத்து மக்களை வாழவைக்க ஜனாதிபதி  பணியாற்றுகின்றார் என்றார்.

    Post Views: 176

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி

    June 28, 2022

    இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறு ஜோ பைடன் ஆலோசனை : மருந்துகள், அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள சர்வதேச வங்கிகளிடம் கோரிக்கை

    June 28, 2022

    இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” – எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

    June 28, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    அக்குரஸ்ஸயில் கப்புறாளையின் தலை துண்டிப்பு; சந்தேகநபரின் பெற்றோர் கைது

    June 29, 2022

    தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ

    June 29, 2022

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

    June 29, 2022

    பொய் பொய் பொய்

    June 29, 2022

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • அக்குரஸ்ஸயில் கப்புறாளையின் தலை துண்டிப்பு; சந்தேகநபரின் பெற்றோர் கைது
    • தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?
    • பொய் பொய் பொய்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version