தமிழகம்: புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டினை வீசி வெடிக்க செய்யும் வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.கருவடிக்குப்பத்தை சேர்ந்த தர்மசீலன் என்ற குறித்த இளைஞன், அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது நண்பர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தனர்.
அதில் தர்மசீலன் தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை தூக்கி வீசுவது போன்றும், அது வெடித்து சிதறி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன.
இவ் வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தர்மசீலனை தொடர்ந்து தேடிவருவதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.