முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு 200 வீட்டு திட்டம் பகுதியில் கடந்த (15) புதன் கிழமை திகதிமுதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் குறித்த சிறுமி சடலமாக காணப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஆடைகள் கலைந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் இன்று (18) சடலமாக மீட்க்கப்படுள்ளார்.
பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.