யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டில் முதல் தடவையாக நேற்று (15) மாலை பட்டப்போட்டி நடத்தப்பட்டது.
கட்டைக்காடு, சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட இப்போட்டியில் 30 பட்டங்கள் பங்குகொண்டன.
அருட்தந்தை வணக்கத்துக்குரிய ரமேஷ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்துகொண்டார்.