Site icon ilakkiyainfo

முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை

இங்கிலாந்தின் கொரொனா தொடர்பான பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முடிவடையும். பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது, கோவிட் பாஸ்போர்ட் ஆகிய இரண்டும் கைவிடப்படும் என்று போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அதோடு, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசு உடனடியாகக் கைவிடும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பூஸ்டர்கள் காரணமாக இங்கிலாந்து, “ப்ளான் ஏ”-விற்குத் திரும்புகிறது மற்றும் இதுவரை மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் கூறினார்.

அமைச்சர்களிடம் பேசியபோது, ஒமிக்ரான் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் கூறினார்.

“இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம்,” என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்தியாளர் சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறினார்.

மேலும், “நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும்போது இந்த நாட்டினால் என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது.

ஆனால், இதை ஒரு முடிவாகப் பார்க்கக்கூடாது. ஏனெனில், வைரஸ் மற்றும் அதன் எதிர்கால திரிபுகளை ஒழிக்க முடியாது. அதற்குப் பதிலாக, ‘காய்ச்சலுடன் எப்படி வாழ்கிறோமோ அதே வழியில் கோவிட் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.

மேலும், கை கழுவுதல், காற்றோட்டமான அறைகள் மற்றும் பாசிடிவ் ஆனால், சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து எடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார். அதோடு, தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ள முன்வருமாறும் வலியுறுத்தினார்.

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர்களுக்கு அளித்த அறிக்கையில்,

இரவு விடுதிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்குள் நுழைவற்கான கட்டாய கோவிட் பாஸ்போர்ட்கள் முடிவடையும். இருப்பினும் நிறுவனங்கள் விரும்பினால் தேசிய சுகாதார சேவையின் கோவிட் பாஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மக்கள் இனி வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் அலுவலகங்களுக்குத் திரும்புவது குறித்து முதலாளிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.

முகக் கவசம் இனி கட்டாயமாக்கப்படாது. இருப்பினும் மக்கள் மூடிய அல்லது நெரிசலான இடங்களிலும் அந்நியர்களைச் சந்திக்கும்போதும் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வியாழக்கிழமை முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இனி வகுப்பறைகளில் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை. அதோடு பொது இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவது குறித்த அரசாங்க வழிகாட்டுதல் ‘விரைவில்’ அகற்றப்படும்.

மேலும், பயண விதிகளை தளர்த்துவது மற்றும் இங்கிலாந்தில் பராமரிப்பு இல்லங்களுக்கு வருவதற்கான கட்டுப்பாடுகள் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வரலாமென்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தொற்று ஆய்வை மேற்கோள் காட்டி, இங்கிலாந்தில் நோய்த்தொற்றுகளின் அளவு குறைந்து வருவதை அதன் தரவு காட்டுவதாக கூறிய ஜான்சன், மருத்துவமனை அனுமதிகள் நிலையாகிவிட்டதாகவும், “ஒமிக்ரான் அலை இப்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியிருக்கலாம்,” என்று விஞ்ஞானிகள் நம்புவதாகவும் கூறினார்.

இருப்பினும் ஆரம்பப் பள்ளிகளில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியவர், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைச் சுட்டிக்காட்டினார்.

இவற்றோடு, கொரோனா வைரசுடன் வாழ்வதற்கான நீண்டகால வியூகத்தை அரசு அமைக்குமென்றும் ஜான்சன் கூறினார்.

தேசிய சுகாதார சேவையில், குறிப்பிடத்தக்க அழுத்தங்கள் இருப்பதாலும் தொற்றுநோய் “முடியவில்லை” என்பதாலும் குளிர்காலத்தின் கடைசி வாரங்களில் “எச்சரிக்கையுடன் இருக்குமாறு” மக்களை அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version