Site icon ilakkiyainfo

அவசர தேவையில் உள்ளோர்க்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனை, யாழில் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை இடைநிறுத்தம்

அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனையினை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் விரைவான ஆன்டிஜென் சோதனை கருவிகளின் பற்றாக்குறையினை சுகாதார அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ளதே மேற்கண்ட தீர்மானத்துக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஹேமந்த ஹேரத் இதனைக் கூறினார்.

விநியோகஸ்தர்கள் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சோதனை கருவிகளை மட்டுமே பெறுகின்றனர்.

இதற்கு முன்னர் சில நாட்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான பரிசோதனைக் கருவிகளைப் பெற்றதாகவும் ஆனால் தற்போது அவை பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார்.

Exit mobile version