p>நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பொன்றிலிருந்து நேற்று (24) இரவு மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய கலிடீன் நிஷா காடன் (Kalidien Nisha Gatoen) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
Tik Tok சமூக வலைத்தளத்தினூடாக அறிமுகமான இளைஞரொருவருடன் காதல் தொடர்பு பேணிவந்துள்ள குறித்த பெண், அவரை தேடி இலங்கைக்கு வந்து குறித்த இளைஞருடன் குறித்த வீட்டில் தங்கி இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
இந்நிலையில் குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸாா் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.