Site icon ilakkiyainfo

கணிப்புக்களை மீறிய போர்!! – சுபத்திரா (சிறப்பு கட்டுரை)

உக்கிரேன்‌ மீதான ரஷ்யாவின்‌ படையெடுப்பு கணிப்புகளுக்கும்‌ எதிர்பார்ப்புகளுக்கும்‌ அப்பாற்‌பட்டதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப்‌ போர்‌ இந்தளவுக்கு நீளும்‌ என்றோ, உக்ரேன்‌ இந்தளவுக்குத்‌ தாக்குப்‌ பிடிக்கும்‌ என்றோ,
ரஷ்யா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவும்‌ இவ்வாறானதொரு களநிலையை கற்பனை செய்யவுமில்லை.

கடந்த பெப்ரவரி 2ஆம்‌, 3ஆம்‌ திகதிகளில்‌, அமெரிக்க காங்கிரஸ்‌ உறுப்பினர்களுக்கு உக்ரேன்‌ நிலைமைகள்‌, ரஷ்யாவின்‌ திட்டங்கள்‌ தொடர்பாக, மூடிய அறைக்குள்‌ விளக்கம்‌ அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின்‌ கூட்டு தலைமை அதிகாரிகளின்‌ தலைவர்‌, (chairman of the joint chiefs of  Staff) ஜெனரல்‌ மார்க்‌ மில்லே (Gen. mark Milley) காங்கிரஸ்‌ உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும்‌
போது, ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கினால்‌, உக்ரேன்தலைநகர்‌, கீவ்‌ 72 மணித்‌’தியாலங்களுக்குள்‌ ரஷ்ய படைகளிடம்‌ வீழ்ச்சியடையும்‌ என்று கூறியிருந்தார்‌.

கீவ்‌ நகரைக்‌ கைப்பற்றும்‌ போரில்‌, 15 ஆயிரம்‌ உக்ரேனிய படையினரும்‌, 4 ஆயிரம்‌ ரஷ்ய படை
யினரும்‌ கொல்லப்படுவார்கள்‌ என்றும்‌ அவர்‌ மதிப்பீடு ஒன்றை முன்வைத்திருந்தார்‌.

அமெரிக்காவின்‌ அந்த மதிப்பீடு எந்தளவுக்கு தலைகீழான நிலையில்‌ இருக்கிறது என்பதை,
தற்போதைய போர்க்கள நிலைமைகளே சாட்சி,

போர்‌ எல்லா நேரத்திலும்‌, கணிப்புகளுடன்‌ பொருந்துவதில்லை. ஒரு போரின்‌ வெற்றி தோல்‌வியை, படை பலமோ, ஆயுத தளபாடங்களோ மாத்‌திரம்‌ தீர்மானிப்பதில்லை..

போரிடும்‌ தரப்புகளின்‌ வீரம்‌, மனவுறுதி, போர்‌ மூலோபாயங்கள்‌, காலநிலை, என்று பிற காரணிகளும்‌ அதில்‌ தாக்கம்‌ செலுத்தும்‌.

1991ஆம்‌ ஆண்டு விடுதலைப்‌ புலிகள்‌ ஆனையிறவுப்‌ பெருந்தளத்தை முற்றுகையிட்டு தாக்‌குதல்‌ நடத்திக்‌ கொண்டிருந்த போது, அதனை முறியடிக்க, வெற்றிலைக்கேணியில்‌ இராணுவத்‌தினர்‌ தரையிறக்கப்பட்டனர்‌.

அடுத்த 72 மணி நேரத்தில்‌ அவர்கள்‌, ஆனையிறவைச்‌ சென்றடைவார்கள்‌ என்று, அப்போது
அரசாங்கம்‌ கூறியிருந்தது.

ஆனால்‌, உதவிக்கு அனுப்பப்பட்ட படையினர்‌,ஆனையிறவு முற்றுகையை முறியடித்து, முகாமுக்குள்‌ சென்றடைவதற்கு, மூன்று வாரங்களுக்கு மேல்‌ சென்றது.

அரச படைகளை விட மிக குறைநத ஆளணி! வளமும்‌, ஆயுத பலமும்‌ தான்‌ விடுதலைப்‌ புலிகளிடம்‌ இருந்த போதும்‌, அவர்களால்‌, அரச படை களின்‌ முன்னேற்றத்தை கணிசமாக தாமதிக்கச்‌ செய்யவும்‌, பெரும்‌ இழப்புகளை ஏற்படுத்தவும்‌ முடிந்தது.

அதற்குக்‌ காரணம்‌, புலிகளின்‌ போர்‌ மூலோபாயங்களும்‌, அவர்களின்‌ துணிச்சல்‌
மற்றும்‌ அர்ப்பணிப்பும்‌ தான்‌.

காலநிலையும்‌, புவியியல்‌ அமைப்பும்‌ அவர்க.ளுக்கு சாதகமற்றதாக இருந்தபோதும்‌, அவர்கள்‌
அந்தக்‌ களமுனையில்‌ தாக்குப்‌ பிடித்தமை பெரும்‌ சவாலை ஏற்படுத்தியது.

அது அவர்களின்‌ மரபுவழிப்‌ போர்‌ வளர்ச்சிக்கு பெரியளவில்‌ கைகொடுத்தது.

உக்ரேன்‌ மீதான படையெடுப்பு விடயத்தில்‌, அமெரிக்காவின்‌ கணிப்புகளை போலவே, ரஷ்‌
யாவின்‌ கணிப்பும்‌, திட்டமும்‌ வேறு விதமான தாகத்‌ தான்‌ இருந்தது

வொலோடிமில்‌ செலன்ஸ்கி

ரஷ்ய ஜனாதிபதியைப்‌ போல, உக்ரேன்‌ ஜனா’திபதி வொலோடிமில்‌ செலன்ஸ்கி நீண்டகால.
அரசியல்‌ அனுபவம்‌ கொண்டவரோ, ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தியவரோ அல்ல.

3 ஆண்டுகளாகவே பதவியில்‌ இருக்கும்‌ அவரை இலகுவாக, சில நாட்களில்‌ அகற்றி விடலாம்‌
என்று ரஷ்யா கணக்குப்‌ போட்டது.

போரைத்‌ தொடங்க முன்னரே, ரஷ்யா தனது சிறப்புப்‌ படைப்பிரிவுகளை உக்ரைனுக்குள்‌
அனுப்பத்‌ தொடங்கி விட்டது.

உக்ரைனுக்கும்‌ ரஷ்யாவுக்கும்‌ இடையிலான எல்‌.லையின்‌ நீளம்‌, 2,295.04 கிலோ மீற்றராகும்‌. இதில்‌, 1,974.04 கிலோ மீற்றர்‌ தரைவழி எல்லையாகும்‌.

‘இந்த தரைவழி எல்லையில்‌ எந்த இடத்திலாவது, உடைப்புகளை ஏற்படுத்தி உள்நுழையக்‌ கூடிய வாய்ப்பு ரஷ்யாவுக்கு இருந்தது.

ஆனால்‌, ரஷ்யாவிடம்‌ இருந்த மிகையான படை பலம்‌ காரணமாக, தனது நட்பு நாடாகிய பெலாரஸ்‌ ஊடாகவும்‌, படைகளை நகர்த்தியது.

ரஷ்ய எல்லைகளில்‌ இருந்து, தலைநகர்‌ கீவ்வை நெருங்குவதை விட, பெலாரஸ்‌ எல்லையில்‌
இருந்து கீவை நோக்கி படையெடுப்பதற்கு தூரம்‌ குறைவு. தெரிவு செய்யப்பட்ட கேந்திர முக்கியத்‌துவம்‌ வாய்ந்த நகரங்கள்‌, இலக்குகளை, சிறப்பு படைகளைக்‌ கொண்டு தாக்கியவாறு, கீவ்‌ நோக்கி இருமுனைப்‌ படையெடுப்பை முன்னெடுக்கிறது
ரஷ்யா.

போர்‌ தொடங்கப்படுவதற்கு முன்னரே, ரஷ்ய சிறப்புப்‌ படைகளும்‌, உக்ரைனில்‌ உள்ள ரஷ்ய  ஆதரவு  “கிளர்ச்சிக்‌.  குழுவினரும்‌, கீவ்‌ உள்ளிட்ட  முக்கிய நகரங்களுக்குள்‌ ஊடுருவியிருந்தனர்‌.

அதைவிட, உக்ரைனின்‌ விநியோகப்‌ பாதைளில்‌ பல, ரஷ்ய ஊடுருவல்‌ குழுக்களினால்‌ தடு,ப்பட்டிருந்தன.

இந்த ஊடுருவல்‌ குழுக்களின்‌ மீது பிரதான நம்பிக்கை வைத்திருந்தார்‌ புடின்‌. அவர்கள்‌ விநியேங்களை தடுத்து, உக்ரேன்படையினரின்‌ நம்பிகயை சிதைப்பார்கள்‌ என்று நம்பினார்‌.

அத்துடன்‌, கீவ்‌ நகருக்குள்‌ ஊடுருவி சிறப்‌!டையினர்‌ மற்றும்‌ குழுவினர்‌, குழப்பங்களை
ஏற்படுத்தி, சண்டையை வழிநடத்த முடியாத நிலையை, ஏற்படுத்தலாம்‌ என்றும்‌ கணித்தந்தார்‌.

அதற்கு அப்பால்‌, சண்டை தொடங்கப்பட்டதும்‌ உக்ரைனின்‌ பல முக்கியமான படைத்தளங்கள்‌
விமானத்‌ தளங்களில்‌, பரசூட்‌ மூலமும்‌ சிறப்பு படைகள்‌ தரையிறக்கப்பட்டன.

இதன்‌ மூலம்‌, இந்த தளங்கள்‌ முடக்கப்பட்டன. ஏவுகணை மையங்களும்‌, ஏனைய இராணுவ கேந்ரங்களும்‌ குறிவைத்து தாக்கப்பட்டன.  ஆனாலும் ரஷ்யா எதிர்பார்த்தபடி கீவ்‌ விழவில்லை.

ஊடுருவியிருந்தவர்களை கண்டறிய ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2006ஆம்‌ ஆண்டு, முகாமாலையில்‌ இருந்த யாழ்பாணக்‌ குடாநாட்டை நோக்கி விடுதலை புலிகள்‌ முன்னேறத்‌ தொடங்கிய போது, உறங்க நிலை உளவாளிகளும்‌, ஊடுருவல்‌ அணிகளும்‌
தயார்படுத்தப்பட்டிருந்தனர்‌.

ஆனால்‌ ஊரடங்குச்‌ சட்டம்‌ பிறப்பிக்கப்பட்டு, அலைபேசி தொடர்புகள்‌ துண்டிக்கப்பட்டதும்‌,
புலிகளின்‌ திட்டம்‌ எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. ஊரடங்கை மீறி வெளியே நடமாடியவர்கள்‌ சுடப்பட்டனர்‌.

அதனால்‌, புலிகள்‌ எதிர்பார்த்தபடி தொலைதூர தாக்குதல்‌ இலக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட வர்களும்‌, குழப்பங்களை ஏற்படுத்தும்‌ தாக்குதல்களுக்காக தயார்படுத்தப்பட்டவர்களும்‌, தொடர்பை இழந்து செயற்பட முடியாத நிலைக்குத்‌ தள்ளப்‌பட்டனர்‌.

அதுபோலத்‌ தான்‌, கீவ்‌ நகருக்குள்‌ ஊருடுவியவர்கள்‌ சில நாட்களிலேயே, தேடித்‌ தேடி வேட்டையாப்பட்டனர்‌. கீவ்‌ நகரின்‌ பாதுகாப்பு உறுதி செய்‌யப்பட்டது. இதனை ரஷ்யா முற்றிலும்‌ எதிர்பார்க்கவில்லை.

அதனால்‌ தான்‌, போர்‌ தொடங்கி நான்காவது நாள்‌, அணு ஆயுதப்‌ படைப்பிரிவை தயார்‌
நிலையில்‌ இருக்குமாறு புடின்‌ உத்தரவிட்டார்‌.

இது உக்ரேனியர்களையோ ஐரோப்பியர்களையோ அச்சுறுத்துவதற்காக அல்ல, ரஷ்ய படைகளின்‌ போரிடும்‌ வலிமையை உயர்த்துவதற்காக மேற்கொண்ட ஒரு உளவியல்‌ நடவடிக்கை.

கீவ்‌ நகரைக்‌ கைப்பற்றும்‌ சண்டையில்‌ 4000 ரஷ்ய படையினர்‌ கொல்லப்படுவார்கள்‌ என்று
அமெரிக்கா கணக்குப்‌ போட்டது. ஆனால்‌, இதுவரை நடந்த சண்டைகளில்‌ உயிரிழந்த ரஷ்ய படைகளின்‌ எண்ணிக்கை, 6 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக உக்ரேன்கூறுகிறது..

எதிர்பாராத வகையில்‌ உக்ரேன்படையினரும்‌, பொதுமக்களும்‌, ரஷ்ய படையினரை மூர்க்கமாக எதிர்க்கின்றனர்‌. போரிடுகின்றனர்‌.

அவர்களின்‌ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும்‌,விமான எதிர்ப்பு ஏவுகணைகளும்‌, ரஷ்யா எதிர்‌
பார்த்ததை விட அழிவுகளை ஏற்படுத்திக்‌ கொண்‌டிருக்கின்றன.

அழிவுகளுக்கு மேலாகத்‌ தான்‌ உக்ரைனைக்‌ கைப்‌பற்ற முடியும்‌ என்று ரஷ்யா அறிந்திருந்தாலும்‌, அது இந்தளவுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தும்‌. என்று கனவில்‌ கூட நினைத்திருக்கவில்லை.

உக்ரைனியர்களின்‌ மனஉறுதிக்கு முன்பாக. ரஷ்யாவின்‌ அதிநவீன போராயுதங்கள்‌ மண்டியிடுகின்றன.

பல இடங்களில்‌ ரஷ்யப்‌ படைகள்‌, விநியோக வசதியின்றியும்‌, எரிபொருள்‌ இன்றியும்‌
தடுமாறிக்‌ கொண்டிருந்தன. தங்களின்‌ போர்‌ டாங்கிகளையும்‌, தளபாடங்களையும்‌ கைவிட்டு தப்பிச்‌ சென்றிருக்கின்றனர்‌.

மிகப்பெரிய வல்லரசான ரஷ்யா தனது போர்‌ ஒழுங்குபடுத்தலில்‌ பலவீனமான நிலையில்‌ இருந்திருக்கிறது என்பதை உக்ரேன்போர்‌ நிரூபித்திருக்கிறது..

இதன்‌ மூலம்‌, ரஷ்யாவின்‌ பலத்தையும்‌, பலவீனத்தையும்‌ மேற்குலக நாடுகள்‌ கண்டு.
பிடிப்பதற்கும்‌, மாற்றுத்‌ திட்டங்களை வகுப்பதற்‌கும்‌ வாய்ப்பை ஏற்படுத்திக்‌ கொடுத்திருக்கிறார்‌ புடின்‌.

– சுபத்திரா

Exit mobile version