சிங்கப்பூரிற்கு தப்பிச்சென்று இரண்டு வாரங்களான பின்னரும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்ககூடிய நாட்டை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்.

அவர் சிங்கப்பூரிற்கு சென்றவேளை அந்த நாட்டின் அரசாங்கம் அவருக்கு இரண்டு வார விசாவை வழங்கியிருந்தது, அந்த நாட்டிற்கு செல்லும் அனைவருக்குமான நடைமுறையிது.

கோத்தபாய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை சிங்கப்பூரிலிருந்து அனுப்பியிருந்தார்- அதற்கு முன்னர் சிங்கப்பூர் அவருக்கு இரண்டு வாரகால விசாவை வழங்கியிருந்தது.

கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்ததன் பேரில் அவருக்கான விசா மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கப்பட்டது.

தற்போது அங்கிருந்து வெளியேறுவதற்கான தருணம், அவர்கள் அதனை நினைவுபடுத்தினர் விசாவை மேலும் நீடிப்பதற்கு சிங்கப்பூர் இணங்கவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்திலும் சவுதி அரேபியாவிலும் புகலிடம் கோருவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அவரது மனைவி அயோமா – மனைவிக்கான பாதுகாப்பிற்கு இருவர்  கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு இருவர் என அந்த குழுவில் ஆறுபேர் உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் உள்ள தனதுகுடும்பத்தினருடனும் அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தவர்களுடனும் தொடர்பில் இருந்தார்.

தனக்கு புகலிடம் கோருவதற்கான பாதுகாப்பான நாடு கிடைக்கும் வரை அவர் தாய்லாந்திற்கு குறுகிய கால விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார்,தாய்லாந்து விஜயம் முடிவடைவதற்குள் தனது முயற்சிகள்வெற்றிபெறும் என அவர் கருதினார்.

கோத்தபாய ராஜபக்ச தனது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடும்அச்சத்தில் உள்ளார் தனது நடமாட்டத்தை குறைத்துக்கொண்டுள்ளார் என்பதை தவிர  அவரது குடும்பத்தினரும் நெருங்கிய சகாக்களும் வேறு எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

தாய்லாந்திற்கு கோத்தபாய ராஜபக்ச செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொறுப்பு அவரின்  முன்னாள் அந்தரங்க செயலாளர்  சுஜீஸ்வர பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச பதவியிலிருந்தவேளை அவரது நாளாந்த நிகழ்வுகளை நிர்வகிக்கும் பொறுப்பு சுஜீஸ்வர பண்டாரவிடம் காணப்பட்டது.

தனது முன்னாள் தலைவரின் வேண்டுகோளிற்கு ஏற்ப பண்டார ஜனாதிபதியின் செயலாளர் சமன்ஏக்கநாயக்கவை தொடர்புகொண்டு  விசா தொடர்பான நடைமுறைகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

முன்னாள்ஜனாதிபதியிடமும் அவரது மனைவியிடமும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் உள்ளன, ஏனைய நால்வருக்கும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆறுபேரும் தாய்லாந்து சென்றதும் விசாவை பெறுவதற்கான தகுதியுடையவர்கள் .

எனினும் தாய்லாந்தின் விசா நடைமுறைகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் தற்போது அந்த நாடு நடைமுறைகளை கடுமையானதாக்கியுள்ளது.வருமானம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் உட்பட புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் முதலில் ஜனாதிபதிக்கு கோத்தபாய ராஜபக்ச தரப்பின் வேண்டுகோள் குறித்து அறிவித்தார்.

இதற்கு சில நாட்களிற்கு முன்னரே தற்போதைக்கு கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவது உகந்த விடயமல்ல என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

தற்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் புலனாய்வு பிரிவினர்  தொடர்ந்தும் அவர் முக்கிய இலக்காக காணப்படுகின்றார்,அவரை ஆபத்தான நிலைக்கு உட்படுத்துவது உகந்த விடயமல்ல என தெரிவித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பி பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் மிரிஹானவில் வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையிலேயே அவரின் புலனாய்வு பிரிவினர் அவர் நாடு திரும்புவது உகந்த விடயமல்ல என குறிப்பிட்டிருந்தனர்.

கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்பினால் அரசியல் ரீதியில் ரணில்விக்கிரமசிங்க பலவீனப்படலாம் என ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்,பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை எடுப்பதை பாதிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

ஜனாதிபதியின் அனுமதியுடன் கோத்தபாய ராஜபக்சவின் வேண்டுகோள்களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் செயலாளர் ஈடுபட்டார்.

அவர் தாய்லாந்திற்கான இலங்கை தூதுவரை தொடர்புகொண்டு  கோத்தபாய ராஜபக்சவிற்கு விசா வழங்கப்படவேண்டும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என தாய்லாந்து அதிகாரிகளை கேட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Share.
Leave A Reply