காதலியொருவர் தன் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்தமையால், அந்த காதலன் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னசியில் சிறையில் இருக்கும் காதலனை பார்க்க சென்ற காதலி கொடுத்த முத்தத்தால் காதலன் மரணம் அடைந்தார்.
போதைப்பொருள் வழக்கில் ஜோசுவா பிரவுன் என்பவருக்கு 2029 வரை 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். போதை பொருள் பயன்படுத்தும் பழக்கத்தால் அவர் சிறையில் போதைபொருள் கிடைக்காமல் தவித்தார்.
இதுதொடர்பாக தன்னை பார்க்கவந்த காதலி ரேச்சல் டொலார்ட்டிடம் கூறினார். ரேச்சல் டொலார்ட் அடுத்த முறை காதலனை பார்க்க சென்றபோது அவருக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்தார். இதில் ஜோசுவா பிரவுன் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
போதைப்பொருள் கிடைக்காமல் சிறையில் தவித்த காதலைனை பார்க்க சென்ற காதலி வாயில் போதைப்பொருள் வைத்திருந்தார். முத்தமிடும் சாக்கில் அவர் வாயில் இருந்து போதை மருந்துகளை காதலன் வாயில் போட திட்டம் தீட்டி இருந்தார்.
எனினும், போதைப்பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் காதலன் 14 கிராம் போதைப்பொருளை மொத்தமாக விழுங்கினார். அதுவே விஷமாகிவிட்டது.
அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது இந்த விஷயம் தெரியவந்தது. அவரது வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், முத்தம் கொடுத்த காதலியான ரேச்சல் டொலார்ட்டை பொலிஸார் கைது செய்தனர்.