அசாமில் வசிக்கும் நிர்மலிக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த கதை இது. நிர்மலியின் முதல் திருமணம் வெற்றிகரமாக அமையவில்லை. 20 வயதில் தனது மகளோடு புகுந்த வீட்டை விட்டு நிர்மலி வெளியேறினார்.
அதன் பிறகு, ஒரு வேலை செய்து கொண்டே, மீண்டும் படிக்க ஆரம்பித்தார்.
நிர்மலிக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில்தான் அவர் ஒருவரை சந்தித்தார்.
இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, திருமணம் வரை சென்றது. இந்த முடிவுக்கு, தனது 20 வயதான மகளிடம் நிர்மலி சம்மதம் கேட்டார்.
அவரும் சம்மதம் தெரிவிக்க, அவரது திருமணம் மகிழ்ச்சியாக நடந்தது.