யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் 3 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த மாணவன் 3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தான்.

கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Share.
Leave A Reply