டெல்லி : இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான ஷிவ் நாடார் பணக்காரர் பட்டியலில் மட்டுமல்லாது நன்கொடையாளர் பட்டியலிலும் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாய் வரை அவர் நன்கொடை அளித்து வெளியாகி இருக்கிறது.
ஹூரூன் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான எடல் கிவ் கூறும் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
ஷிவ் நாடார்
தனது ஷிவ் நாடார் பவுண்டேஷன் மூலம் கிட்டத்தட்ட 1161 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி இந்த ஆண்டு முதல் இடத்தை பெற்றிருக்கிறார்.
சராசரியாக பார்க்கும்போது இவர் ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாய் வரை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்.
இதற்கடுத்ததாக விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசின் பிரேம்ஜி 484 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த பிரேம்ஜி இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
கெளதம் அதானி
இந்த பட்டியலில் உலகில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி ஏழாவது இடத்தையே பெற்று இருக்கிறார். இவர் கடந்தாண்டு 190 கோடி ரூபாயை மட்டும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் 15 பேர் 100 கோடி ரூபாய்க்கும் மேலாகவும், 20 பேர் 50 கோடி ரூபாய்க்கும் மேலாகவும் 43 பேர் 20 கோடி ரூபாய்க்கும் மேலாக நன்கொடை அளித்திருக்கின்றனர்.
பெண்கள் கலக்கல்
கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலில் இரண்டிலிருந்து 18 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்த பட்டியலில் ஆறு பெண்களும் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 19 பேர் நன்கொடை பட்டியலில் இணைந்திருக்கும் இவர்கள் மொத்தமாக சுமார் 800 கோடி ரூபாய் வழங்கியிருக்கின்றார்.
அவர்களில் ரோகிணி நிலோக்கனி 120 கோடி வரை நன்கொடை வழங்கி பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
பணக்காரர் பட்டியல்
சிவசுப்பிரமணியம் நாடார் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் தற்போது அந்த நிறுவனத்தின் கவுரவ தலைவராக இருக்கும் அவர் திருநெல்வேலியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற அவர் அதற்குப் பிறகு திருச்செந்தூர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.