ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Flash News Fed 001

    ஒரு ஆணைக் கொண்டு பெண்கள் எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்!!: இந்து மதம் சொல்கிறது..

    AdminBy AdminOctober 24, 2022No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    • பெண்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.

    • ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.

    ஆண் இறந்தால் பெண் கொல்லப்பட வேண்டும் என்பதை இந்து தர்மம் கவனமாகப் போதித்துக் கொன்றது.

     பெண்களை இழிவு படுத்தும் இந்து மதம்:  “இந்து மதத்தில் ஆண் பெண்ணின் வக்கரித்த உறவுகள்” கட்டுரை சிறு பகுதி சுருக்கப்பட்டு உள்ளவாறே இங்கு.

    • மனு பூமியின் எஜமானர்கள் என்ற கூற்றின் படி உயர்சாதிப் பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில் கொண்டிருந்தனர்.

    • பார்ப்பனர்கள் தாழ்ந்த சாதிப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.”

    ”தேவர்கள் என்றும் மண்ணின் கடவுள்கள் என்றுக் (பார்ப்பனர்கள்) கூறுபவர்களும், ஆளும் வர்க்கமான சத்திரியர்களும் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் முதல் முதலில் உறவு கொள்ளும் உரிமையைக் கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது.

    கி.பி. 1502 இல், இந்தியாவுக்கு வந்திருந்த லூடோவிக்கோல்டி வர்த்தமா கள்ளிக் கோட்டை பார்ப்பனர்கள் பற்றி கூறியது.

    ”அரசன் திருமணம் செய்யும் போது மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ள இந்தப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தன் மனைவியுடன் முதலிரவைக் கழிக்க அவரை அனுப்பிவிடுவர்.”

    இது போல் ஹாமில்டன் என்ற எழுத்தாளர் எழுதியதில் ”சமோரின் (ஒரு சமூகப் பிரிவு) திருமணம் செய்யும்போது நம்பூதிரியோ அல்லது முதன்மை மதக்குருவோ மணப்பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது.

    • இவர் (மதக்குரு) விரும்பினால் மூன்று இரவுகள் கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனின் அப்பெண்ணின் திருமண இரவில் முதல் கனிகள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டும்.”

    • ”அரசக் குடும்பங்களிலும் பிரபு குடும்பங்களிலும் பெண்கள் பார்ப்பனர்கள் மூலம் கருவுறுவதைப் புண்ணியமாகக் கருதினர். பார்ப்பனர்களுக்கு உடல், மன, காம வேட்கைகளில் சுகமளிப்பது சொர்க்கத்தை அடைவதற்கான வழியென பெண்கள் நம்பினர்.

    • பார்ப்பனர்கள் விருந்தினனாக வீட்டிற்கு வந்தால், அவன் முதியவனாக இருந்தபோதும், கன்னிகைகளான இளம் பெண்களை அவனுடைய படுக்கையறைக்கு அனுப்ப குடும்பத் தலைவர்கள் ஆர்வம் காட்டினர்.

    • கன்னிப் பெண்கள் இல்லையென்றால், அந்த வீட்டிலுள்ள மிகவும் வயது குறைந்த பெண், பார்ப்பனனின் பணிவிடைக்காக நியமிக்கப்பட்டாள்.

    • அந்தப் பெண்ணுக்குக் கணவன் இருந்தால், அவன்   இந்தச் சமயம் அறைக்கு வெளியே படுப்பது வழக்கம்.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய ஒரு சமுதாய முறை இருந்தது…” பார்ப்பனிய மதம் மற்றைய மதங்கள் மீதான வெற்றிகளின் மீது பக்தியின் பின்னால் அரங்கேறிய வடிவமிது.

    • மனு 2.213 இல், ”இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்”25

    • மனு 2.214 இல், ”இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்”25

    • மனு 2.215 இல், ”தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்”25

    • மனு 9.14 இல், ”பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்” என்கிறார்,

    • மனு 9.15 இல், ”ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்”

    • மனு 9.16 இல், ”படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்”25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

    • மனு 9.17 இல், ”படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை”

    • மனு 9.2 இல், ”இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்.”

    • மனு 9.3 இல், ”குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்.”

    • மனு 9.5 இல், ”எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;” என்கிறது, இந்து தர்மம்.

    • மேலும் மனு 4.147 இல், ”சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது”

    • மனு 11.45 இல், ”கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது.”

    • மனு 9.46 இல், ”விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது.”

    • மனு 5.149 இல், ”தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது”

    • மனு 8.415 இல், ”மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்”

    கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.

    • மனு 8.299 இல், ”மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்” என்று மனுதர்மம் கோருகின்றது.

    பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

    • மனு 2.66 இல், ”பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,…….” மனு 9.18

    • மனு 9.36 இல், ”வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது….”

    • மனு 9.36 இல், ”அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்….”

    • மனு 4.205 இல் ”ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது.”

    • மனு 4.206 இல்,”பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்”

    • மனு 5.151 இல், ”தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது”

    • மனு 5.154 இல், ”அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;”

    • மனு 5.150 இல், ”அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்”

    • மனு 5.155 இல், ”கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்”

    • மனு 5.153 இல், ”புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே”

    அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ”சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்”

    ”உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது.”

    மகாபாரதத்தை எழுதிய வியாசர் கூட பராசன் என்ற பார்ப்பன ரிஷிக்கு காளியென்ற மீனவப் பெண்ணிடம் பிறந்த மகனே வியாசர். இந்த வியாசர்க்கு க்ருதாசி என்ற வேத மங்கை பிறந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

    கேரளத்தில் சென்ற நூற்றாண்டில் கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கோரியது.

    இந்த அவமானத்தை தாங்க முடியாது ”சேர்த்தலை” என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவர் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாராம். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று அழைக்கப்படுகின்றது)… கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன…”

    தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் கோயில் விபச்சாரிகளை உருவாக்கியது.

    சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற வைக்கப்பட்டாள். பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டினர்.

    கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில் நீராடியதுடன், முதல் குழந்தையைக் கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.

    நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப் பலி கொடுத்தனர்.

    கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்றனர்.

    இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள், அது சார்ந்த தானங்கள் என நீண்டு, இந்துமதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

    இன்று சிவசேனை முதல் இந்திய பாரதிய ஜனதாக் கட்சி ஈறாக இந்து மதச் சிவில் சட்டத்தை இந்து மக்கள் மீது திணித்து பாசிசக் காட்டுமிராண்டித்தனத்தை அமுல் செய்யத் துடிக்கின்றனர். இந்த இந்துச் சட்டம் என்பது பார்ப்பனியத்தின் ஆதாரமான மனுவின் சட்டமே.

    இந்துச் சூத்திரம் பெண்ணை ஆணின் போகத்துக்குரிய படைப்பாக இந்திரன் படைத்தான் என்று கூறுவதன் மூலம் பெண் பாலியல் பண்டமாகின்றாள்.

    அத்துடன் யுத்தங்களில் வென்று வரும் வீரனுக்குப் பெண்கள் பரிசளிக்கப்பட்டதுடன், பெண்கள் பலாத்காரமாக அவர்களின் குடும்பத்தில் இருந்த மற்றைய பொருட்களுடன் சேர்த்து சூறையாடப்பட்டாள்.

    இதற்கு வேதங்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. இங்கும் பெண் பண்டத்துடன் பண்டமாகக் கவரவும், கற்பழிக்கவும் இருந்த உரிமையை இந்து மதம் அங்கீகரித்தது.

    போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், ”ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்”

    மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், ”பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. – எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! – எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை.

    எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.

    – நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்”  32 என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.

    தொடர்ந்து மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39.8 இல், ”அதாவது பெண்களின் அறிவு, கண்டு பிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.”

    49.22 இல், ”பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

    43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்,  தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள்.

    43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள்.

    43.24 இல், அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.

    தொடரும்…

    Post Views: 2,419

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இப்படியும் நடந்ததா? `நீ ஒருவரல்ல இருவர், அந்த இருவரும் இனி மூவர்…’ ஒரே மாதிரி இருந்த மூவரின் கதை!

    February 6, 2023

    அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை

    February 6, 2023

    கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.

    February 5, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version