“>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் வருகையை கண்டு மகிழ்ச்சியடைந்த இராணுவ வீரர்கள் இலங்கையின் புகழ்பெற்ற பாடகர் ஏ.ஈ.மனோகரனால் பாடப்பட்ட “சுராங்கனிட்ட மாலு கெனாவா” பாடலை தமிழ், சிங்கள வரிகளுடன் பாடி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.