ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்த காதலி – பாறசாலை இளைஞர் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

    AdminBy AdminOctober 31, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    களைக்கொல்லி பூச்சிமருந்தைக் கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரைக் கொலை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

    கன்னியாகுமரி – கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துவந்த ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணைக் காதலித்திருக்கிறார்.

    ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா ரெக்கார்ட் நோட்டுகள் எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்துவந்திருக்கிறார்.

    இந்த நிலையில் ரெக்கார்ட் எழுதி முடித்துவிட்டதாகக் கூறிய கிரீஷ்மா கடந்த 14-ம் தேதி ஷாரோன் ராஜைத் தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார்.

    ஷாரோன் ராஜ் தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார்.

    ஷாரோன்ராஜ் தனியாக கிரீஷ்மாவின் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ், வாந்தி எடுத்திருக்கிறார்.

    பைக்கில் இருந்த அவரின் நண்பர் ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக் கேட்டதற்கு, அவர் சரியாக பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டுக்குச் சென்ற பிறகு அவரது உடல்நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து பாறசாலையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் வயிற்றுப்பகுதியிலுள்ள உறுப்புகள் செயலிழந்தன. அதைத் தொடர்ந்து அவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    கிரீஷ்மா வீட்டில் ஜூஸ் குடித்ததாக ஷாரோன் ராஜ் மருத்துவமனையில் வைத்துக் கூறியதைத் தொடர்ந்து அவரின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் புகார் அளித்தார்.

    போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஷாரோன் ராஜின் உடலில் விஷம் சென்றிருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் முதற்கட்டமாகத் தகவல் தெரிவித்தனர்.

    ஷாரோன் ராஜும் கிரீஷ்மாவும் வெட்டுக்காடு சர்ச்சில் வைத்து ஏற்கெனவே ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும், தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவதாக கிரீஷ்மா அடிக்கடி கூறிவந்ததாகவும் கூறப்படுகிறது.

    கிரீஷ்மாவுக்கு ஏற்கெனவே வேறு நபருடன் நிச்சயம் ஆனதால், அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஷாரோன் ராஜுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    அதேசமயம் தான் குடித்த மருந்து கஷாயத்தை ஷாரோன் ராஜ் கேட்டதால் குடிக்கக் கொடுத்ததாகவும், அது கசப்பாக இருப்பதாக ஷாரோன் ராஜ் கூறியதால் ஜூஸ் கொடுத்ததாகவும், மற்றபடி தங்கள் வீட்டில் விஷம் இல்லை என்றும் கிரீஷ்மா தெரிவித்துவந்தார்.

     

    இந்த நிலையில் வழக்கு மாவட்ட க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மாவிடமும், அவரின் பெற்றோரிடமும் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

    அதில் தனது மாமா பயன்படுத்திவந்த களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரைக் கொலைசெய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

    ஆனால், ஜாதக நம்பிக்கைப்படி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட கிரீஷ்மாவும், ஷாரோன் ராஜும் `ஜூஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

    Post Views: 92

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.

    February 5, 2023

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version