சவூதி – தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த தம்பி ஐயா தவராசா எனும் 64 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் சவூதி – தமாம் பகுதியில் இவர் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவை அமைப்பின் வாகன சேவை ஊடாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply