ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், சராசரியாக அலகொன்று 29.14 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மின்சார சபைக்கு சுமார் 423 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply