இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீதே பாரிய மரம் வீழ்ந்துள்ளது.
இதன்போது ஓட்டோ சாரதி உள்ளிட்ட நால்வர் பயணித்துள்ளடன், 61 வயதான பி.எஸ்.மயில்வாகனம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரும் காயங்களுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.