சிறுநீரக மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொரளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மனித உடற்பாகங்கள் கடத்தல் விற்பனை தொடர்பில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
மனித உடற்பாகங்களை கடத்தும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடவில்லை ஒருபோதும் அதில் ஈடுபடமாட்டோம் என அந்த வைத்தியசாலைதெரிவித்துள்ளது.
முக்கிய சூத்திரதாரி தற்போது கைதுசெய்யபபட்டுள்ளார் என்பதையும் வைத்தியசாலை சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரைணையின் போது ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய உண்மை வெளிவரும் என கருதுகின்றோம் என வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று தசாப்தகாலமாக செயற்பட்டு வருகின்றோம் இந்த காலப்பகுதியில் சர்வதேச தராதரம் பணியாளர்கள் சேவைகள் மூலம் வழங்கிய சேவைகளிற்காக சர்வதேச உள்ளுர் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளோம் என குறிப்பிட்ட வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை நாங்கள் 1200 சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைகளை செய்துள்ளோம்,பத்தாயிரம் நோயாளிகளிற் மேல் நோயை கண்டுபிடித்துள்ளோம் என குறிப்பிட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதேவேளை பாராட்டுகளுடன் எதிர்ப்பையும் நாங்கள் சந்திக்கவேண்டிய நிலையேற்பட்டது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒரு முக்கிய அரசியல்வாதி நாங்கள் சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சை வழங்கினோம் என குற்றம்சாட்டினார் என வைத்தியசாலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி வேகமாக சமூக ஊடகங்களில் பரவி எங்களின் கௌரவத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது இந்த அறிக்கை முற்றிலும் தவறானது வைத்தியசாலைக்கு எதிராக அவதூறை கற்பிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை காரணமாக சிஐடியினர் வைத்தியாசாலை குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர் எனவும் பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதேபோன்று வைத்தியசாலையை சிக்கவைக்க வேண்டுமென்ற மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி இடம்பெறுகின்றது. 2022 நவம்பர் 18 ம் திகதி சிறிய குழுவொன்று வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து தங்களின் சிறுநீரகத்தை வழங்கியமைக்கான பணம் எங்கே என கேட்டது என பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தொகை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எங்கள் பணியாளர்கள் அவர்களிடம் நீங்கள் உங்கள் உறுப்புகளை விற்பனை செய்ய முடியாது அது சட்டவிரோதமானது என தெரிவித்தனர் எனவும் பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.