பெய்ஜிங்: கடினமான சூழல்களை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் ஆயுதப்படை ஒத்துழைப்பை சீனா மேற்கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்திருக்கிறார்.

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதாக ஒப்புக்கொண்டதன் விளைவாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது.

இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அமெரிக்க தான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளாமல் மேற்கு நோக்கி தொடர்ந்து நேட்டோ எல்லையை விரிவுபடுத்தி வருவதாகவும் எனவே இந்த போருக்கு அமெரிக்காதான் காரணம் என்றும் ரஷ்யா குற்றம்சாட்டி இருக்கிறது.

இவ்வாறு இருக்கையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.

மேலும், போரை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. மட்டுமல்லாது ரஷ்யாவின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

மேலும் ரஷ்யாவை முடக்க அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கடந்த காலங்களில் பல தீர்மானங்களை கொண்டு வந்திருக்கிறது. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் இதனை தள்ளுபடி செய்துவிடும்.

கூட்டு பயிற்சி
இப்படி இருக்கையில் ரஷ்யா-சீனா நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருந்தது.

கிழக்கு சீனக்கடலில் ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு பயிற்சியானது கடந்த செவ்வாய்க்கிழமை(டிச.26) முடிவடைந்தது.

ஏற்கெனவே தைவான் விஷயத்தில் கறாராக இருக்கும் சீனா தற்போது ரஷ்யாவுடன் பயிற்சியை மேற்கொண்டிருப்பது அமெரிக்கா, பிரிட்டன் மத்தியில் புதிய கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது. ஏனெனில் இந்த பயிற்சி எப்போதாவது ஒரு முறைதான் நடைபெறும். பதற்றமான சூழலில் தங்கள் பலத்தை பறைசாற்ற இந்த பயிற்சியை சீனா மேற்கொள்ளும்.

உரையாடல்
இப்படியாக கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை வெறும் 7 முறை மட்டுமே இப்பயிற்சி நடைபெற்றிருக்கிறது.

இதனையடுத்து இன்று இரு நாட்டு அதிபர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்தித்து உரையாடினர்.

அதில் புதின் பேசியதாவது, “இதற்கு முன்னர் இல்லாத அளவில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே ஆயுதப்படை ஒத்துழைப்பே மேப்படுத்துவதை ரஷ்யா இலக்காக கொண்டுள்ளது” என்று சீன அதிபரிடம் புதின் கூறியுள்ளார். ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு
இதற்கு பதிலளித்த ஜி ஜிங் பிங் இந்த ஒத்துழைப்புக்கு சீனா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து உலகின் இரண்டு பெரிய ராணுவ சக்திகள் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது வரை அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து பல்வேறு பகுதிகளில் கூட்டு ராணுவ பயிற்சியையும் நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்த நிலையில் இனி இம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது கேள்விக்குறியாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

சீனா
அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக அமெரிக்காவை சீனா முறியடிக்க உள்ள நிலையில் அந்த சூழலில் சீனாவின் கூட்டு சக்திதான் இந்த உலகை ஆட்சி செய்யும் என்றும், அமெரிக்காவின் ஆதிக்கம் படிப்படியாக குறைய தொடங்கும் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மட்டுமல்லாது ரஷ்யாவுடன் சீனா கைகோர்த்திருப்பது நிச்சயம் இந்தியாவுக்கு நல்ல செய்தியாக இருக்காது.

ஏனெனில் ரஷ்யாவிடமிருந்துதான் பெரும்பாலான பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா வாங்கி வருகிறது.

ஆனால் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இப்படி இருந்தால் சீனாவை முழுமையாக இந்தியாவால் எதிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply