யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் மேயரான இம்மானுவல் ஆர்னோல்ட் யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வௌியான வர்த்தமானி அறிவிப்பை அடுத்தே அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ். மாநகர சபைக்கு புதிய மேயரை தெரிவு செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம், மேயர் தெரிவு இடம்பெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் படி யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.