♠ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
♠ பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். பின்னர், ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து, பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இறுதியாக நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் கண்களுக்கு விருந்தளித்தன.
இந்த அணிவகுப்பில் “தமிழ்நாடு வாழ்க” என்ற வாசகத்துடன் கூடிய அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தன.