கர்நாடகாவில் அந்தரங்க போட்டோக்களை ஷேர் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி ஆகியோர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பெங்களூரு: கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி தனது தனிப்பட்ட அந்தரங்க போட்டோக்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக சசிகலா புகழ் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பான போட்டோக்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரோகினி சிந்தூரியை விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடியாக ரூபா மனநோயாளி என ரோகினி சிந்தூரி விளாசியிருந்தார். இதுதொடர்பாக இரு அதிகாரிகளும் பொதுவெளியில் மோதிக்கொண்ட நிலையில் இன்று கர்நாடகா அரசு அவர்கள் வகித்த பதவிகளை பறித்து 2 பேர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் இரு அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவில் என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:

கர்நாடகாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் டி ரூபா. இவர் கர்நாடகா மாநில கைவினை பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக செயல்பட்டு வந்தார். அதேபோல் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ரோகினி சிந்தூரி. இவர் அம்மாநில இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் 2 பேருமே கர்நாடகாவில் பெயர் பெற்ற அதிகாரிகள் ஆவார்கள். சொத்து குவிப்பு வழக்கில் தண்டை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது சிறையில் அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக டி ரூபா குற்றம்சாட்டி கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பிரபலமானார்.

ரோகினி சிந்தூரி – டி ரூபா பிரச்சனை

இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி இடையே 2 நாட்களாக பெரிய சண்டை நடந்து வருகிறது.

கடந்த 2021ல் ரோகினி சிந்தூரி மைசூர் கலெக்டராக இருந்தபோது அவருக்கும் மைசூர் கிருஷ்ணராஜநகரை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) எம்எல்ஏ சாரா மகேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருவரும் மாறிமாறி ஊழல் புகார் செய்தனர். இந்நிலையில் தான் ரோகினி சிந்தூரி, சாரா மகேஷ் உணவகத்தில் சந்திக்கும் போட்டோவை டி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு ‛‛சமரசம் செய்கிறார்களா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் ஊழல், முறைகேடு தொடர்பான புகார்கள் ரோகினி சிந்தூரிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தும் இன்னும் விசாரிக்கப்படவில்லை எனக்கூறி 20 வகை கேள்விகளை டி ரூபா எழுப்பி இருந்தார்.

 

படங்களை பகிர்ந்ததால் சர்ச்சை

அதோடு ரோகினி சிந்தூரியின் 7 தனிப்பட்ட(பிரைவேட்) படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ரூபா வெளியிட்டு இருந்தார்.

இதில் சில படங்கள் ஆபாசமாக இருந்தன. இந்த பதிவில் டி ரூபா, ‛‛இந்த படங்களை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது ரோகினி சிந்தூரி ஷேர் செய்துள்ளார்.

இது ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகள் படி குற்றத்துக்குரியது. இதுபற்றி எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்” என தெரிவித்திருந்தார். இந்த பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதனால் கோபமடைந்த ரோகினி சிந்தூரி, ‛‛மனநோய்க்கு சிகிச்சை என்பது தேவை. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது.

அவதூறு பரப்பும் வகையில் டி ரூபா செயல்படுகிறார். ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்து இருந்தார். இந்த மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது.


2 பேரின் பதவிகள் பறிப்பு

மேலும் சம்பவம் தொடர்பாக ரோகினி சிந்தூரிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா, தலைமை செயலாளரிடம் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தான் இன்று கர்நாடகா அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கர்நாடகா மாநில கைவினை பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக பணியாற்றிய ரோகினி சிந்தூரி ஆகியோரின பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.

அதாவது இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரோகினி சிந்தூரி, டி ரூபா ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்காத கர்நாடக அரசு இருவரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.

மாறாக ரோகினி சிந்தூரி வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிக்கு பசவராஜேந்திரா ஐஏஎஸ்சும், ரூபா வகித்து வந்த கர்நாடகா மாநில கைவினை பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் பொறுப்புக்கு பராதி ஐஏஎஸ்சும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரும் அதிரடி மாற்றம்

மேலும் இந்த விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபாவின் கணவரையும் கர்நாடக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரூபாவின் கணவர் முனிஷ் மவுத்ஜில் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றி வருகிறார். நில ஆவணங்கள் மற்றும் சர்வே செட்டில்மென்ட் துறை கமிஷனராக இவர் பதவி வகித்து வந்த நிலையில் இன்றைய உத்தரவில் முனிஷ் மவுத்ஜில்லும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் பர்ஷனல் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ரிபார்ம்ஸ் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்துள்ளார்.

Share.
Leave A Reply