இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

புதுடெல்லி: டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த படுகொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது காதலன், சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான்.

கத்தியால் குத்தியதுடன் விடாமல், அருகில் கிடந்த சிமெண்ட் ஸ்லாப்பையும் எடுத்து தாக்கி உள்ளான் இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனாள். அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்துள்ளனர்.

இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆதாரத்தை வைத்து குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

“நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர், ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது” என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார்.

>

Share.
Leave A Reply