“பருத்தித்துறையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. பெண்களின் உள்ளாடைகளை திருடிக் கொண்டு சென்ற போது, மதில் ஏறி செல்ல முற்பட்ட போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் நேற்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
அருகில் சம்பவம் நடந்த வீட்டிலிருந்த இளம் பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன. பருத்தித்துறை 2ஆம் குறுக்குத்தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீற்கப்பட்டிருந்தார்.
அவரது வீட்டிற்கு அண்மையாக உள்ள 3ஆம் குறுக்குத்தெருவில் உள்ள பிறிதொரு வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டிற்குள் உயிரிழந்தவர் அத்துமீறி நுழைந்திருந்தார்.
சடலம் மீட்கப்பட்ட வீட்டிலிருந்த பெண் பிள்ளைகளின் உள்ளாடைகள், உயிரிழந்தவரின் சடலத்துக்கு அருகில் காணப்பட்டது
அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார். பெண்களின் உள்ளாடைகளை திருடிக் கொண்டு, மதில் ஏறி செல்ல முற்பட்ட போது, தவறி விழுந்து வலது கை பகுதியில் உரசல் காயம் ஏற்பட்டிருந்தது.
நிலத்தில் விழுந்த போது இரத்த நாளம் வெடித்து, நுரையீரலுக்குள் இரத்தம் சென்று, உயிரிழந்தது தெரிய வந்துள்ளது