நெடுந்தீவில் நுழையும் இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக்கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
பயணித்தவர்களை காப்பாற்றியதுடன், எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் கடலுக்குள் விழுந்துவிடாத வகையில் புதன்கிழமை (07) மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளது.