மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்த பொலிஸார் விசாரணை செய்தனர்.

அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனைப் பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரைப் பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் கைகலப்பாகி மோதல் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version