இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நிறுத்தப்பட்டிருந்த காரொன்று அசைவதைக் கவனித்த பொலிஸார். அக்காருக்கு அருகில் சென்று பார்த்துள்ளார்.
காருக்குள் 24 வயதான ஆணும், 23 வயதான பெண்ணும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அது தொடர்பில் மற்ற அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.
இந்தோனேசியாவில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.
ஆகவே, காருக்குள் நெருக்கமாக இருந்த அந்த இருவருக்கும் தண்டனையாக 25 சவுக்கடிகள் கொடுப்பது என தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனையை நிறைவேற்றும்போது, வலி பொறுக்கமுடியாமல் அந்தப் பெண் சுருண்டு விழுந்தார். அதைத் தொடர்ந்து, இருவருக்கும் 21 சவுக்கடிகள் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இஸ்லாமிய சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் இந்தோனேசியாவில், மது அருந்துவது, சூதாடுவது, திருமணத்துக்கு முன் நெருக்கமாக இருப்பது போன்ற குற்றங்களுக்கு சவுக்கடி தண்டனையாக கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.