ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நீதவான் விசாரணையை கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply