பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் உக்ரேன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது.
இந்நிலையில், செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பேசியதாவது,
முதல் கட்டமாக அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும்.
இருப்பினும் பெலாரஸ் நாட்டிற்கு முதல்கட்டமாக அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளோம். முழுமையாக இந்த கோடை முடிவதற்குள் அனுப்பி வைப்போம். பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேற்குலகிற்கு ஒரு எச்சரிக்கை. இவ்வாறு புடின் பேசினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவில் இருந்து அணு ஆயுதங்கள் வந்துள்ளதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகஷென்கோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.