மன்னார் கட்டுக்கரை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(02) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயிருந்தநிலையில் மீனவர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை(3) காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த தந்தையான விசுவா (வயது-57) என தெரிய வந்துள்ளது. இவர் 4 பிள்ளைகளின் தந்தையாவார்.
காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த வள்ளத்தில் நீர் நிரம்பி தாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றைய மீனவரை ஏனைய மீனவர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. -உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.