♠ போலீஸ் அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்தும்படி, இந்த சம்பவத்தை பதிவு செய்தவர் வலியுறுத்தினார்.
♠ விசாரணை நடந்து வருவதாக கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 17-வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதால், அங்கு கலவரம் வெடித்தது.
காவல்துறையினரின் அத்துமீறலை பலர் கண்டித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒரு பெண்ணை தரையில் தள்ளிவிட்டு, அவர் முகத்தில் மிளகுத்தூள் தூவி சித்ரவதை செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் ஜூன் 24 அன்று லான்காஸ்டரில் உள்ள வின்கோ (WinCo) மளிகை கடைக்கு வெளியே நடந்திருக்கிறது.
ஆனால், கடைக்குள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்ததாகவே காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அந்த வீடியோவில், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு ஆணுக்கு விலங்கிடுவது தெரிகிறது. அதே நேரம் ஒரு பெண் இந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறார்.
அப்போது ஒரு அதிகாரி அந்த பெண்ணை நோக்கிச் சென்று, அவளைப் பிடித்து கீழே தள்ளுகிறார்.
பின்னர், அப்பெண்ணின் முகத்தில் “பெப்பர் ஸ்பிரே” (Pepper Spray) தூவுகிறார். அப்பெண் சத்தமிட்டு, “என்னை தொடாதே” என்று கெஞ்சுவதும், கைது செய்யப்பட்ட நபர், “அவளை தாக்காதீர்கள்.
அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது” என கூறுவதையும் காண முடிகிறது. இந்த சம்பவத்தை பதிவு செய்தவரும், அந்த பெண்ணை கீழே தள்ளிய அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்துமாறு கத்துகிறார்.
காவலரின் முழங்கால் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்ததா அல்லது முதுகில் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.
வீடியோவை பதிவு செய்த லிசா மிச்செல் காரெட், பாதுகாப்பு பணியில் முன்னர் இருந்ததாக தெரிகிறது.
அதிகாரிகள் ஆணையும், பெண்ணையும் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை கவனித்தவர் அதனை பதிவு செய்திருக்கிறார்.
வீடியோவில் உள்ள பெண், “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று கூறியதாக லிசா தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம், விசாரணை நடந்து வருவதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “தற்போதைய விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஷெரீஃப் அலுவலக பணியாளர்கள் அனைத்து பொதுமக்களையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஷெரிஃப் தெளிவுபடுத்தியுள்ளார்.
தங்கள் செயல்களுக்கு பணியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இருவரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மட்டும் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் (Minneapolis) நகரில், 2020 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல்துறை அதிகாரிகளால் இதே போன்று கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்தது பெரும் பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.
This is Lancaster, California.
A Los Angeles county sheriffs deputy throws a Black woman to the ground and brutalized her for filming them arresting her husband.
Filming the police is not illegal.
This is brutality.
Arrest this pig. pic.twitter.com/BKg9dnZX7M
— Bishop Talbert Swan (@TalbertSwan) July 4, 2023