மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ பச்ச மிளகாய் 1300 ரூபாவும் ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவும், ஒரு கிலோ கரட் 500 ரூபாவுமாக உயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 1300 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றோம்.
அதே வேளை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதுடன் சந்தையில் ஒரு கிலோ இஞ்சியை கொள்வனவு செய்ய முடியாது அந்தளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே போல் கரட் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், உருழை கிழங்கு 240 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் 150 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
இவ்வாறான தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாக பொது மக்கள் தமது உணவான கறிகளில் பச்சை மிளகாய் இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.