மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் ஒருவரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, அவர் தனது மூன்று வயதான குழந்தையை பணயக் கைதியாக பிடித்து பொலிஸாரை அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் மிகுந்த பிரயத்தனத்துடன் அவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது குழந்தையை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (18) மதுரங்குளி, ஜின்னவத்த கிராமத்தில் பெண் ஒருவரை ஆண் ஒருவர் தாக்குவதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 ஊடாக மதுரங்குளி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றபோது, தனது குழந்தையை பணயமாக வைத்திருந்த சந்தேக நபர் கத்தியால் இரு பொலிஸாரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தேக நபரை மக்கள் ஒத்துழைப்புடன் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் கைது செய்துள்ளார்.

Share.
Leave A Reply