மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய தாயும் ஒன்றரை வயது குழந்தையும் காணாமல் போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்குரன்கெத்த பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply