மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திலும் இன்று வியாழக்கிழமை (03) காலை பேரணியொன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக போராட்டம் நடத்திய இப்பேரணியை மாண்புமிகு மலையக மக்கள் மற்றும் யாழ். சிவில் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

மலையகம் 200ஐ முன்னிட்டு ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) தலைமன்னாரில் அமைக்கப்பட்டிருந்த ‘மலையகம் 200’ நினைவுத்தூபிக்கு மரியாதை செலுத்தப்பட்டதோடு ஆரம்பமாகி ஏழாம் நாளாக இன்று அந்த பேரணியின் நடைபயணம் தொடர்கிறது.

‘மலையகம் 200’ எழுச்சிப் பேரணி இன்றைய தினம் மடு சந்தியில் இருந்து ஆரம்பமாகி செட்டிக்குளம் நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply