கந்தானை பள்ளிய வீதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரசாயன தொழிற்சாலையொன்றில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 02 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குறித்த இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறினால் 102மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply