உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷ்ய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என தெரிவித்து இருக்கிறார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மொஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயற்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

எனினும், இதன் விளைவை கருத்திற்க் கொண்டு இணைய வசதியை செயற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க தொடங்கியது.

“செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயற்படுத்துமாறு அரச அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்,” என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

SpaceX, Twitter and electric car maker Tesla CEO Elon Musk attends an event during the Vivatech technology startups and innovation fair at the Porte de Versailles exhibition centre in Paris, on June 16, 2023. (Photo by JOEL SAGET / AFP)

Share.
Leave A Reply