• சில நாட்களுக்கு முன்னதாக டோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவதைக் காண முடிந்தது.
• ஆட்டோகிராப் போட்ட டோனி ரசிகர் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி. இவர் சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார்.
நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையேயான ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தை டோனி நேரில் பார்த்து ரசித்தார்.
இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானது. டோனி ரசிகர்களிடம் ஜாலியாக பேசுவது விளையாடுவது போன்று இருப்பதால் அவர் தொடர்பான வீடியோ அதிக அளவில் வைரலாகும்.
இந்நிலையில் தற்போது அது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டோனி ஒரு ரசிகர்கருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
அப்போது ஆட்டோகிராப் போட்ட டோனி ரசிகர் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கினார். இது எனக்கு தானே எடுத்து வந்தாய் என வேடிக்கையாக பேசினார். உடனே அவரும் சாக்லேட்டை கொடுத்து சிரித்து கொண்டே நகர்ந்தார்.
முன்னதாக டோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவதைக் காண முடிந்தது. இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
MS Dhoni signing autographs for fans in the USA.
– MSD, an icon…..!!! pic.twitter.com/pQhkgDyFTb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 10, 2023