யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவமொன்றுக்கு தயாரான நிலையில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (16) கைது செய்துள்ளனர்.
மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் கும்பல் ஒன்று மோதலுக்கு தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிராகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது பொலிஸாரை கண்டதும் வாள் வெட்டு கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளன.
பொலிஸார் துரத்தி சென்று ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் தப்பியோடிய மற்றைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.