அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது.
பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்
இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் மற்றவர் 60 இலட்சம் ரூபாவையும் ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.